Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
கணக்குப்போடும்போது மன அழுத்தமும் போராட்டமும் இருக்கும். கொடுப்பதில் மகிழ்ச்சி இருக்கிறது.
முளைக்காத விதை கல்லுக்கு சமம். தெய்வீகத்தின் விதையாய் விளங்கும் நீங்கள் செழித்து வளர, நீங்கள் திறந்த நிலையில் இருக்க வேண்டும்.
ஆன்மீகம் என்றால் தரிசுநிலம் போல இருப்பதல்ல. உயிர்த்தன்மையும் மகிழ்ச்சியும் ததும்ப இருக்கும் ஒருவரால்தான் உண்மையாகவே விடுதலையாக இருக்கமுடியும்.
மன அழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் விளைவாக ஏற்படுவதில்லை - உங்களை நீங்களே நிர்வகிக்க முடியாததன் விளைவாக ஏற்படுகிறது.
கர்மா என்றால் உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்வது. கர்மவினையை விழிப்புணர்வான செயல்முறையாக மாற்றும்போது, உங்கள் விதிக்கு நீங்களே அதிபதியாகிறீர்கள்.
சிரிக்க முடியாத ஒருவரால் தியானம் செய்ய முடியாது. உங்கள் உயிர்சக்தி துடிப்பாய் இருப்பதன் ஒருவித வெளிப்பாடுதான் சிரிப்பு. உங்கள் உயிர்சக்தி, உடல்செயல் இல்லாமல் உச்சபட்ச உயிரோட்டத்தில் இருப்பதுதான் தியானம்.
நீங்கள் வெற்றியை அனுபவிக்க விரும்பினால், வெளி சூழ்நிலைகளைக் கட்டமைக்கும் முன், முதலில் உங்களை நீங்கள் கட்டமைத்துக்கொள்ள வேண்டும்.
நம் அனைவருக்கும் ஆனந்தமாகவும் உள்நிலையில் நலமாகவும் வாழும் ஆற்றல் உண்டு - நமக்குள் சரியான சூழ்நிலையை மட்டும் உருவாக்கினால் போதும்.
மற்றவர்களிடம் மிகச்சிறந்ததை வெளிக்கொணரும் திறன்தான் உங்களை ஒரு தலைவராக்குகிறது.
இளமையாய் இருப்பது என்றால், கற்றுக்கொள்ளவும், வளரவும், உயிருக்குத் திறந்த நிலையில் இருக்கவும் விருப்பமாய் இருப்பது.
மகிழ்ச்சியோ துயரமோ, வலியோ இன்பமோ, வேதனையோ பரவசமோ, அடிப்படையில் அது உங்களுக்குள் இருந்தே நிகழ்கிறது.
பொருள் உலகில் நிகழும் ஒவ்வொன்றுமே, அடிப்படையில் ஒருவிதமான அலைதான். நீங்கள் ஒரு நல்ல படகோட்டியாக இருந்தால், ஒவ்வொரு அலையும் ஒரு சாத்தியமே.